புதன், 18 ஜூன், 2014

ஆரோக்கியத்துக்கு ஏற்ற சத்துணவும், அதன் அளவும்


ஆரோக்கியத்துக்கு ஏற்ற சத்துணவும், அதன் அளவும்

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம். சத்தான உணவு என்றால் இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம், கொழுப்பு என எல்லாம் அடங்கிய கலவைதான். ஆனால், அதில் என்னென்ன எவ்வளவு இருக்க வேண்டும் என்று நாம் அறிவதில்லை.
அது பற்றி அனைவரும் அறிந்து அதற்கேற்ப உணவினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கார்போஹைட்ரேட்
பருப்புகள், கொட்டைகள், பழங்கள், பால், சர்க்கரை, தேன், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இருப்பது கார்போஹைட்ரேட் ஆகும். இது நமது அன்றாட உணவில் 40 முதல் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது, உடலுக்குத் தேவையான சக்தியையும், கொழுப்பையும் அளிக்கிறது. குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போகிறது. அதுதான் சத்துணவுக் குறைபாடு எனப்படுகிறது. அதுவே கார்போஹைட்ரேட் அதிகரிக்கும் போது உடல் பருமன் ஏற்படுகிறது.
புரதச் சத்து
தானியங்கள், கொட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், மீன், முட்டை ஆகியவற்றில் உடலுக்கு தேவைப்படும் புரதச் சத்து அடங்கியுள்ளது.
இது நமது அன்றாட உணவில் நிச்சயம் இடம்பெற வேண்டியதாகும்.  உடலின் வளர்ச்சி மற்றும் உடல் எடையை பராமரிக்க புரதச் சத்து தேவைப்படுகிறது.
உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உருவத்துக்கும் அதனை உடல் உறுப்புகளுடன் இணைப்பதற்கும் புரதச் சத்து உதவுகிறது.  மேலும், தொற்று நோய் கிருமிகளிடம்இருந்து உடலை காக்கவும் புரதம் உதவுகிறது.
புரதச் சத்து குறைவதால் உடல் எடை குறைதல், பலவீனம் ஏற்படுகிறது.
கொழுப்பு
நெய், வெண்ணை, க்ரீம், சீஸ், கொட்டைகள், உலர் பழங்கள், முட்டை, மீன், கோழிக்கறி போன்ற உணவுப் பொருட்களின் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. நமது அன்றாட உணவில் 15 முதல் 25 சதவீதம் கொழுப்புச் சத்து நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது உடலுக்குத் தேவையான சக்தியை அளிப்பதோடு, நமது மூளையின் வளர்ச்சிக்கும், மத்திய நரம்பு மண்டல இயக்கத்துக்கும் பேருதுவி புரிகிறது.
கொழுப்புச் சத்து குறைந்தால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். அதிகமாக உட்கொண்டால் உடல் பருமன், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இவை அல்லாமல் விட்டமின் ஏ, டி, இ, கே, பி1, பி2, சி உள்ளிட்டவையும் உடலுக்குத் தேவையான சத்துக்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக