வெள்ளி, 20 ஜூன், 2014

64GB மெமரியுடன் அமேசான் வெளியிட்ட பிரம்மாண்ட மொபைல்...!

இன்றைக்கு ஸ்மார்ட் போன் சந்தை என்பது மிகவும் அதிகமாக இலாபம் கிடைக்கும் ஒரு சந்தையாக உருவாகிவிட்டது எனலாம். இதுவரை லேப்டாப்புகள் மற்றும் கம்பியூட்டர்கள் தயார் செய்து வந்த பல முன்னனி நிறுவனங்கள் மொபைல்களை தயாரித்து வெளியிட ஆரம்பித்து விட்டன. 
 இப்ப நம்ம பாக்க இருக்கறது ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான்(Amazon) தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளதுங்க. அமேசான் பயர்(Amazon Fire) என்று பெரியடப்பட்டுள்ள இந்த மொபைலின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒரு 3D மொபைல் ஆகும். 
மேலும், இந்த மொபைலில் டைனமிக் பர்ஸ்பெக்டிவ்(Dynamic Perspective) என்ற ஒரு ஆப்ஷனும் இருக்கறது இந்த ஆப்ஷன் மூலம் உங்களது முகத்தை இந்த மொபைல் ஸ்கேன் செய்து கொள்ளும். பின்பு மொபைல் இடதுபுறம் அல்லது வலதுபுறம் எங்கு திருப்பினாலும் மொபைலின் டிஸ்பிளே உங்களை நோக்கியே நகரும் அதன் வீடியோ கீழ இருக்குங்க உங்கள் பார்வைக்கு. மேலும், இது ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் இல்லை என்பது சிறப்பு செய்தியாகும் இது அமேசானே தயாரித்த பயர் ஆப்ரேட்டிங் சிஸ்டம்(Fire OS) மூலம் இயங்கக்கூடியதாகும்.
 4.7 இன்ச் கொண்ட இந்த மொபைல் 2.2GHz ஸ்னேப் டிராகன் பிராஸஸர் மற்றும் 2GB ரேமுடன் இயங்கக்கூடியதாகும். 13MP க்கு கேமரா மற்றும் 2.1MP க்கு பிரன்ட் கேமராவுடன் இந்த மொபைல் வெளிவந்திருக்கிறது 32GB மற்றும் 64GBக்கு இன்பில்ட் மெமரியும் வித்தியாசம் கொண்ட இரண்டு மொபைல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மொபைலுக்கு அமேசான் நிறுவனம் அன்லிமிட்டேட் க்ளவுட் ஸ்டோரேஜையும் தருகின்றது, இதன் விலை 32GB க்கு 200 டாலர்களும் 64GB க்கு 300 டாலர்களையும் நிர்ணயித்துள்ளது அமேசான் நிறுவனம் இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது. இதோ அந்த மொபைலின் முழு வீடியோவையும் பாருங்கள்...

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=91x3JhanUoQ




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக