திங்கள், 23 ஜூன், 2014

உங்கள் சொந்த சூரிய அடுப்பைத் தயாரித்தல்



உங்கள் சொந்த சூரிய அடுப்பைத் தயாரித்தல்
வீட்டில் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய எளியப் பொருட்களைக் கொண்டு சூரிய அடுப்பைத் தயாரிக்க முடியும். இந்தநீங்களே தயாரிக்கக் கூடியசூரிய அடுப்பைக் கொண்டு சுவையான சாப்பாட்டை தீப்பெட்டி கொண்டு பற்ற வைக்காமலே தயாரிக்கலாம்.
தேவையானப் பொருட்கள்
  • இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள்- இரண்டு பெரிய கிண்ணங்கள் வைத்தது போக இடம் இருக்கும் அளவிற்கு. ஒரு பெட்டி மற்றொரு பெட்டிக்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும்.
  • வைக்கோல் / பழைய செய்தித்தாள்கள் - பழைய செய்தித்தாள்களை எடுத்து கசக்கவும். வைக்கோல் கிடைத்தால் அடைத்து வைக்க உபயோகப்படும்.
  • வைக்கோல் / பழைய செய்தித்தாள்கள் - பழைய செய்தித்தாள்களை எடுத்து கசக்கவும். வைக்கோல் கிடைத்தால் அடைத்து வைக்க உபயோகப்படும்.
  • அலுமினிய பாயில்
  • கருப்பு நிற அக்ரிலிக் பெயிண்ட்
  • பேகிங் டேப்
  • கத்தரிக் கோல்
  • கண்ணாடி மூடி
  • இரண்டு அலுமினிய கிண்ணங்கள் உலோக மூடியுடன்
  • அரை கிண்ணம் அரிசி, தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள்
செய்முறை
உட்புற பெட்டி: பெட்டியை நன்றாக சுத்தம் செய்து, மேற்புற பகுதி தவிர மற்ற எல்லா பக்கங்களையும் டேப் வைத்து ஒட்ட வேண்டும். பெட்டி நல்ல திடமான நிலையில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும். நல்ல கூர்மையான கத்தரிக்கோல் கொண்டு உட்புற பெட்டியின் மேல் மூடியை வெட்ட வேண்டும். கரடு முரடான பகுதிகளை ஒட்டும் டேப் கொண்டு மூடவும். இப்பொழுது பெட்டியின் உட்புறத்தை நல்ல கருப்பு நிற அக்ரிலிக் வர்ணம் கொண்டு நன்றாக வர்ணம் பூசவும். பின்பு பெட்டியை காய வைக்கவும்.
வெளிப்புற பெட்டி: பெட்டியை நன்றாக சுத்தம் செய்து, மேற்புற பகுதி தவிர மற்ற எல்லா பக்கங்களையும் டேப் வைத்து ஒட்ட வேண்டும். பெட்டி நல்ல திடமான நிலையில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும். உணவுப் பொருட்களை மூடி வைக்க பயன்படுத்தப்படும் அலுமினிய காகிதத்தை பெரிய பெரிய் துண்டுகளாக கத்தரிக்கோல் கொண்டு வெட்ட வேண்டும். அந்த காகிதங்களைக், பெட்டியின் மேல் மூடியின் உட்புறத்தில் ஒட்ட வேணடும். பின்பு பெட்டியை காய வைக்கவும்.
அடைப்பு பொருட்கள் : வெப்பத்தை மெதுவாக கடத்த வல்ல பொருட்களாகிய சுருட்டி வைக்கப்பட்ட செய்தித்தாள், வைக்கோல், தவிடு போன்றவற்றை உபயோகிக்கவும். பெரிய பெட்டியின் அடிப்புறத்தில் இந்த பொருட்களை கொண்ட ஒரு அடுக்கை வைத்து அதன் மீது சிறிய பெட்டியை வைக்கவும். இரு பெட்டிகளின் இடையே நான்கு புறங்களிலும் இடைவெளி இல்லாதவாறு இப்பொருட்களைக் கொண்டு அடைக்கவும். இவ்வாறு செய்த பிறகு இரண்டு பெட்டிகளும் ஓர் அமைப்பாக மாறிவிடும்.
கண்ணாடி மூடி : கண்ணாடி மூடியை உட்புறப் பெட்டியின் மேற்புறம் மீது வைக்கவும்.
சாப்பாடு : இரண்டு ஒளி பிரதிபலிக்காத கிண்ணங்களை மூடியுடன் எடுத்துக் கொள்ளவும். ரு கிண்ணத்தில் அரை கப் கழுவிய அரிசியைப் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். இன்னொரு கிண்ணத்தில் உங்களுக்கு பிடித்த காய்களை ஓர் கரண்டி எண்ணெய், சுவைக்கேற்ற அளவு உப்பு, ஓர் துளி மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாயுடன் கலந்து எடுத்துக் கொள்ளவும் இரண்டு கிண்ணங்களையும் ஜாக்கிரதையாக உங்களுடைய சூரிய அடுப்பின் உள் வைத்து சூரிய ஒளி படும் படி வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பின் இயற்கையின் தூய்மையான நன்மையினால் சுவையான சாப்பாடு தயாராகி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக