நோயாளிகளுக்கு, 'ட்ரிப்ஸ்' மூலம்
மருந்து செலுத்தும் போது, கூடவே, மருந்து புட்டியை தலைகீழாக தொங்க விடுவதற்கு, ஓர்
உலோக ஸ்டாண்டையும் நிறுத்தி விடுவர். வாரக் கணக்கில் ட்ரிப்ஸ் ஏற்ற
வேண்டியிருந்தால், நோயாளியையும் இந்த ஸ்டாண்டையும் பிரிக்கவே முடியாது.
இயற்கை உபாதைக்குப் போக வேண்டி இருந்தாலும், கூடவே இந்த ஸ்டாண்டும் வரும். இது போல அவஸ்தையை
அனுபவித்த, அலிசா ரீஸ் என்ற டென்மார்க் வடிவமைப்பாளர், இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய, 'ஐ.வி., வாக்' என்ற ட்ரிப்ஸ் பையை, நோயாளி தன் மேல் உடை போல
அணியலாம்.பையில் மருந்துகளை ஊற்றி வைக்கலாம். ஐ.வி., வாக்குடன் இருக்கும் ஒரு மின் பம்ப்,
மருந்தை குழாய் வழியாக உடலுக்குள் மெதுவாக செலுத்தும். எப்போதும் படுத்தபடியே இருக்க நேரும் நோயாளிகள், ஐ.வி.வாக்கை அணிந்து, சற்று காலாற நடக்க முடிந்தால், சீக்கிரம் குணடைய முடியும் என்கிறார் ரீஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக