சொரியாசிஸ் எனப்படும்
சொறி நோய் ஏற்பட்டால், அதன் தன்மையையும் வகையையும்
தெரிந்து கொள்ள, தோல் மருத்துவர் தனது கண்களைத் தான் நம்ப வேண்டும்.
ஆனால் ஜெர்மனியிலுள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் முன்சன் மற்றும் மியூனிச்
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், சொரி நோயை
துல்லியமாக மதிப்பிட, ஒரு கையடக்க கருவியை உருவாக்கியுள்ளனர்.'ஆர்சம்' என
சுருக்கமாக அழைக்கப்படும், 'ராஸ்டர் ஸ்கேன் ஆப்டோ அக்கஸ்டிக் மீசோஸ்கோப்பி' தொழில்நுட்பம்
மெல்லிய லேசர் துடிப்புகளை பயன்படுத்துகிறது. லேசர்
பட்டதும் தோலின் திசுக்கள் வெப்பமடைந்து, விரிவடைகின்றன. அப்படி விரிவடையும்
பகுதி, மீஒலி
அலைகளை எழுப்பும். இந்த ஒலியை ஒரு உணரி சாதனம் உள்வாங்கி, தோலின்
வடிவமாக திரையில் காட்டுகிறது.ஆய்வுக்கூடத்தில் ஆர்சம் கருவி
மூவமான சோதனைகளில், நோயாளியின் தோலின் தடிமன், ரத்தக்
குழாய்களின் அடர்த்தி, ரத்தத்தின் அளவு போன்றவற்றை கண்டறிய முடிந்ததாக, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இந்தக்
கருவியை பயன்படுத்துவது எளிது. இதில் வேதிப் பொருளோ, கதிர்வீச்சோ இல்லை என்பதால், பக்க
விளைவுகள் கிடையாது. இந்தக் கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து சொரியாசிசின் தன்மை, தோலின்
நிலை போன்றவற்றை துல்லியமாக அறிய, தோல் மருத்துவரால் முடியும் என்கின்றனர் இதை
உருவாக்கிய விஞ்ஞானிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக