உடற் பயிற்சி செய்வதால், வயதானவர்களுக்கு மூளைத் திறன் குறைவதை
தடுக்க முடியும் என்பதற்கு பல
ஆதாரங்கள் வர ஆரம்பித்துள்ளன. 'நேச்சர்' இதழ் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, மூச்சு வாங்கச் செய்யும் உடற்பயிற்சியால், உடலில் உற்பத்தியாகும், 'கோலின்' என்ற வேதிப்பொருள் மூளைத் திறனை பாதுகாப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், வயதானவர்களின் மூளை செல்கள் அழிவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக