மியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)
மியூச்சுவல் ஃபண்ட்
என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டும்
பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில் ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப்
பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஏன் ? எப்படி என்கிறீர்களா?…. நமக்குதானே தெரியாது, ஆனால் அதைப் பற்றி
தெரிந்தவர்களிடம் கொடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சொன்னால், நன்றாகத்தானே இருக்கும்!. அப்படிச் செய்தால், அதுதான் மியூச்சுவல் ஃபண்ட்.
இன்னும் சற்று விளக்கமாக
சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்டை ஒரு நிறுவனமாக எடுத்துக்
கொள்வோம். இதில் நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு
செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக்
ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள்.
மியூட்சுவல் பஃண்ட்
நிறுவனங்கள், தாங்கள் திரட்டிய நிதியை (Funds) பங்குச்சந்தையில் எந்தெந்த துறைகளில் (Sectors) முதலீடு செய்வார்கள்
என்பதை பற்றியும், அவ்வாறு முதலீடு செய்யும்பொழுது எவ்வளவு வட்டி (Interest) கிடைக்கும் என்பதையும் பற்றியும், முதலீட்டை சார்ந்த
விதிமுறைகளை (Terms &
Conditions) பற்றியும் விளக்கும்
தொகுப்பே “மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட்” ஆகும். எந்த ஒரு மியூட்சுவல்
ஃபண்ட்-யில் முதலீடு செய்வதற்கு முன், அதனுடைய ஆஃபர்
டாக்குமண்டை படித்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மியூச்சுவல் ஃபண்ட் எந்த
துறையில் முதலீடு செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள, அப்ஃபண்டின் ஆஃபர் டாக்குமண்டில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.
யூனிட் என்பது தமிழில்
அலகு எனப்படும். யூனிட்கள் என்பது பங்குகளைப் (shares) போலதான்.
யூனிட்களை நாம் எப்போது
வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், மியூச்சுவல் பஃண்ட்
நிறுவனங்கள் அதை முதன் முதலாக வெளியிடும் பொழுதோ அல்லது அதற்கு பிறகு கூடவோ
வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள்
(units) முதன் முதலாக வெளியிடும்
பொழுது முகப்பு விலைக்கு (Face value) கிடைக்கும். அந்த நிதியினைக் (funds) கொண்டு வாங்கிய பங்குகளின் விலை ஏற்ற இறங்கங்களை பொறுத்து
யூனிட்களின் விலை மாறுபடும்
மியூச்சுவல் ஃபண்டில் ஏன்
முதலீடு செய்ய வேண்டும்?
- முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையை பற்றி போதிய அறிவின்மை மற்றும் நேரமின்மை போறன்வற்றின் காரணமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆவர்வம் காட்டுவார்கள்.
- பங்குச்சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பங்குகளை கூட, மியூச்சுவல் ஃபண்ட் முலம் சிறிய யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம்.
- மியூச்சுவல் ஃபண்ட்-களில் ரிஸ்க் குறைவு.
- நாம் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிபுணர்களை கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- பங்குச்சந்தையில் லிஸ்ட் (List) செய்யப்பட்ட கம்பனிகளின் மிக முக்கியமான தகவல்கள், பொதுவாக ஒரு முதலீட்டாளருக்கு கிடைக்காது. ஆனால், அத்தகைய தகவல்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
முதலீட்டாளர் மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனங்களால் அங்கிகரிக்கப்பட்ட தரகர்கள் (Registered members) மூலமாகவோ, அல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கோ சென்று முதலீடு
செய்யலாம். இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (Application form) பாண் எண் (PAN Number), மற்றும் முதலீடு செய்வதற்கான தொகையை காசோலையாகவோ (check) அல்லது
வரை ஓலையாகவோ (Demand Draft) எடுத்து செல்ல வேண்டும்.
- மியூச்சுவல் ஃபண்ட் ஆபர் டாக்குமெண்டை கவனமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
- மியூச்சுவல் ஃபண்ட் பிளானை தேர்வு செய்ய வேண்டும். அதாவது டிவிடண்ட் பிளான, குரோத் போன்றவை.
- தேர்வு செய்த பிளானின் தற்போதைய NAV-யை பார்க்க வேண்டும்.
- பிளானின் கடந்த கால செயல்பாடுகளை பற்றி ஆராய வேண்டும். அதாவது, எவ்வளவு டிவிடண்ட் கொடுத்துள்ளார்கள், எத்தனை முறை கொடுத்துள்ளார்கள் போன்றவை.
- தேர்வு செய்த மியூச்சுவல் ஃபண்ட் பிளானை வாங்குவதற்கு எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிப்பார்கள். அதாவது , என்டிரி லோட் மற்றும் எக்ஸிட் லோட் ஆகியவை.
- நிபுணர்களின் ஆலோசனை பெறுவது.
ஓபன் என்டட் மற்றும் குலோஸ்
என்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
ஓபன் என்டட் மியூச்சுவல் ஃபண்ட்-யில் (Open ended mutual funds), இவற்றின் யூனிட்களை (units) முதலீட்டாளர் எப்போது வேண்டுமானலும் வாங்கலாம், அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதனை லிக்விடிட்டி (Liquidity) என்று அழைக்கப்படும். இதற்கு கட்டணமாக நம்மிடமிருந்து ஒரு தொகை அப்போதைய பிளானின் NAV-யை கொண்டு கணக்கிட்டு எடுத்துக்கொள்வார்கள்.
குளோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் (Closed ended mutual funds), இது உங்கள் ஏறியாவில் நடக்கும் சீட்டு போல, ஒரு குறிப்பிட்ட கால்த்திற்கு மட்டுமே கிடைக்கும். பொதுவாக ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு நடத்துவார்கள்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வருமான வரி விலக்கு பெற முடியுமா?
ஆமாம். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களுக்கு, வருமான வரி விலக்கு உண்டு (Income tax rebate). இப்பிளான்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில், இருபது சதவிகித்திற்கு(20%) இன்கம் டாக்ஸ் ஆக்ட் (Income Tax Act)-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
ஓபன் என்டட் மியூச்சுவல் ஃபண்ட்-யில் (Open ended mutual funds), இவற்றின் யூனிட்களை (units) முதலீட்டாளர் எப்போது வேண்டுமானலும் வாங்கலாம், அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதனை லிக்விடிட்டி (Liquidity) என்று அழைக்கப்படும். இதற்கு கட்டணமாக நம்மிடமிருந்து ஒரு தொகை அப்போதைய பிளானின் NAV-யை கொண்டு கணக்கிட்டு எடுத்துக்கொள்வார்கள்.
குளோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் (Closed ended mutual funds), இது உங்கள் ஏறியாவில் நடக்கும் சீட்டு போல, ஒரு குறிப்பிட்ட கால்த்திற்கு மட்டுமே கிடைக்கும். பொதுவாக ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு நடத்துவார்கள்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வருமான வரி விலக்கு பெற முடியுமா?
ஆமாம். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களுக்கு, வருமான வரி விலக்கு உண்டு (Income tax rebate). இப்பிளான்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில், இருபது சதவிகித்திற்கு(20%) இன்கம் டாக்ஸ் ஆக்ட் (Income Tax Act)-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட
முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எது ?
யூனிட் டிரஸ்ட் ஆப்
இந்தியா (UTI – Unit Trust Of
India) என்ற நிறுவனமே இந்தியாவில்
முதன் முதலில் யூ.டி.ஐ ஆக்ட் (UTI
ACT) என்ற விதியில் கீழ்
தொடங்கப்பட்டது.
அனைத்து மியூச்சுவல்
பஃண்ட் நிறுவனங்களும் செ.பி (SEBI
- Securities and Exchange Board of
India) என்றால் அமைப்பிடம்
பதிவு (registers) செய்து உரிமம் பெற வேண்டும். ஆனால், யூ.டி.ஐ-க்கு மட்டும் இது விதிவிலக்கு (except UTI), ஏனென்றால்
இந்நிறுவனம் பாராளமன்றத்தால்
(Parliament) வேறு விதியின் கீழ்
தொடங்கப்பட்டது.
பங்குச்சந்தை முதலீட்டை
வீட மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானதா?
இல்லை. அனைத்து
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப் போல அதே
ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப்
போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு
அறிந்த நிபுணர்களால் முதலீடு செய்யப்படுவதால், சொஞ்சம் ரிஸ்க் குறைவு.
மியூச்சுவல் ஃபண்ட்
முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ?
மியூச்சுவல் ஃபண்ட்
முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே
அமையும். எப்போதெல்லாம்
பங்குச்சந்தை சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் சரிவுவைக்
காணும் . ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட்
மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க் குறைக்கப்படும்
சிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட்
பிளான் என்றால் என்ன ?
முதலீட்டாளர்
நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம்.
- இம்முதலீட்டின் மூலம், நாம் மிக பெரிய தொகையை உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம்.
இவை இரண்டுமே
முதலீட்டாளர்களிடம் இருந்து தொகை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்வதுதான்.
ஆனால், செய்யும் முதலீட்டாளர்கள் வேறு படுவார்கள்.
மியூச்சுவல் ஃபண்டில், பெறுமளவு சிறு முதலீட்டாளர்களே (retail investors) பங்கு பெறுவார்கள். ஆனால் போர்ட் போலியோ
மேனேஜ்மெண்ட் ஸ்கீம்ஸில், பெறுமளவு பெரிய முதலீட்டாளர்கள் பங்கு
பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக