''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்!''
''காலையில 10 மணிக்குத் தண்ணீர் வருதுன்னா, சிலர் 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை குழாயில் அடிச்சுப்பார்ப்பாங்க. தண்ணீர் வராது. காத்திருப்பாங்க. அடுத்த வேலையில கவனம்செலுத்த முடியாது. இதை எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சேன்.
டெலிபோன் லைன், ரோடு போடுறது, பாதாளச் சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டுறது போன்றவைகளுக்குக் குழி தோண்டும்போது பைப் லைனில் உடைபட்டு கழிவு நீர், குடிநீருடன் கலந்துவரும். அதேமாதிரி மழைக் காலத்தில் தண்ணீர் சற்று கலங்கலாக இருக்கும். எனவே, தண்ணீரின் தெளிவைக் கண்டுபிடிக்க அலாரம் அடிக்கும் கருவியில் சின்ன மாற்றம் செஞ்சேன். பி.யூ.சி. இணைப்புபைப்பில் கண்ணாடிக்குழாய் பொருத்தியிருக்கேன். இந்தக் கண்ணாடிக் குழாயின் நுனியில் சின்ன துவாரம் இருக்கும். காற்றைத் தள்ளிக்கிட்டுத் தண்ணீர், கண்ணாடிக்குழாயினுள் சென்று துவாரத்தின் வழியாக வெளிவரும்போது தண்ணீரின் தெளிவை நம் கண்ணாலேயே பார்க்கமுடியும். தவிர, தெளிவு இல்லாத கலங்கலான தண்ணீர்வந்தா, அதை நமக்குத் தெரிவிக்கிற விதமாக டேஞ்சர் அலாரம் அடிக்கிறமாதிரி அமைச்சிருக்கேன். அதேபோல தண்ணீர்வரும் நேரத்துக்கு முன்னதாக அலாரம் அடிக்கிறதோட, மொபைலுக்கு 'வாட்டர் கம்மிங்’னு எஸ்.எம்.எஸ். வரும் வசதியையும் உருவாக்கி இருக்கேன். இதனால், வீட்டில் இருப்பவர்கள் வெளியிலோ அல்லது வேலைக்கோ போயிருந்தால் தகவல் தெரிஞ்சுக்க முடியும்!'' என்றார்.
இதுதவிர, வாழைத் தண்டிலிருந்து நூல் எடுத்துக் கைக்குட்டை, துண்டு போன்றவற்றைத் தயாரித்திருப்பவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக