வெள்ளி, 17 அக்டோபர், 2014

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்... சமாளிப்பது எப்படி?

சமாளிக்க சில டிப்ஸ்!


4LlhT7V.jpg?1

1. உங்களுக்கான ஒரு மாத செலவுகளை திட்டமிட்டு அதற் கேற்றவாறு பணத்தை எடுத்து சரியாக செலவு செய்யப் பழகுங்கள். இப்படி செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பரிவர்த்தனை களுக்கு  மட்டுமே ஏடிஎம் கார்டினை பயன்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.


2. உங்களால் ஒரு மாதத்துக்கான செலவை முழுமையாக திட்டமிட சிரமமாக இருந்தால், ஒரு வாரத்துக்கு ஒருமுறை என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதையும் நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் முதலில் செய்யுங்கள். 


3. தொலைபேசிக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்யுங்கள். ஷாப்பிங் செய்யும்போது பணத்துக்குப் பதிலாக டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள்.


4. இந்த மாதம் இந்த செலவு மட்டுமே என திட்டமிட்டால், அடிக்கடி ஏடிஎம்மை நாட வேண்டிய அவசியம் இருக்காது.



5. அதிக தொகையை எடுக்க நேரிட்டால், வங்கிக்கு சென்று எடுங்கள். இதன்மூலம் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும்.


6. காசோலைகளைப் பயன்படுத்த கட்டணம் இல்லை என்பதால் காசோலைகள் ஏற்றுக்கொள்ள கூடிய இடங் களில் காசோலைகளைப் பயன்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக