வெள்ளி, 27 மார்ச், 2015

சுக்கிர ஜெயந்தி : சுகபோக வாழ்வு தரும் சுக்கிரன்

சுக்கிர ஜெயந்தி : சுகபோக வாழ்வு தரும் சுக்கிரன்


 நவக்கிரகங்களில் சுக்கிரன் களத்திரகாரகன். பஞ்சகோண பீடத்தை உடையவர். அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். மழை பெய்ய உதவுபவர். திருமணம், களத்திரம் இவற்றிற்கு அதிபதி. பஞ்சபூதங்களில் நீர். அந்தண குலத்தை சேர்ந்தவர். அமிர்த சஞ்சீவி மந்திரத்தின் மூலம் இறந்து போன அசுரர்களுக்கு உயிர் கொடுத்தவர். இவருடைய தசாபுத்திகள் நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். 29.03.2015, 10.00AM சுக்கிர ஜெயந்தி நாளில் சுக்கிரனை வழிபட்டு அவரது அருள் 
பெறுவோமாக

சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார். திருமால், வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து கொண்ட சுக்கிரசாரியர், மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்றடி மண் தரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் மகாபலியோ சுக்கிரனின் பேச்சை கேட்காமல் இருந்ததால் சுக்கிரசாரியர், வண்டாக உருவெடுத்து கமண்டலத்தின் வழியில் நீர் வெளியேற முடியாதபடி அடைத்துக்கொண்டார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி. கமண்டலத்தின் நீர் வெளியேறும் பகுதியில் தர்ப்பைப்புல்லை விட்டு அடைப்பை நீக்க முயற்சித்தார். இதனால் வண்டின் உருவத்தில் இருந்த சுக்கிரசாரியாரின் ஒரு கண்ணில் தர்ப்பை புல் அடிப்பட்டு சுக்கிரசாரியர் ஒரு கண்பார்வையை இழந்தார். தன் நலத்தைவிட தன்னை நம்பி இருப்பவர்களின் நலமே பெரியதென்று இருக்கும் இவர், உண்மையானவர்நல்ல மனம் படைத்தவர் என்பதை உணர்ந்தார் விஷ்ணுபகவான். இதனால் சுக்கிரபகவானின் மீது மதிப்பு வைத்திருந்தார்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரதசை, இருபது வருடங்கள். இக்காலகட்டத்தில், ஸ்ரீரங்கநாதரை வணங்கினால் சுக்கிரனால் கிடைக்கும் நன்மைகள் தடையின்றி கிடைக்கும். ஒரு வேலை, சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தால், ஸ்ரீரங்கநாதரையும்மகாலட்சுமியையும் வணங்க வேண்டும். பொதுவாக ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லாமல் இருந்தால், கலைதுறையில் மேன்மை தராது. அதனால் சுக்கிர தோஷம் இருப்பவர்கள், வெள்ளை தாமரையை லட்சுமி படத்தின் முன்வைத்து வணங்கவேண்டும். வெள்ளி தோறும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிரபகவானின் முன், தாமரை திரி தீபத்தை ஏற்றி சுக்கிரபகவானுக்கு ஆராதனை செய்துவழிபட்டால், கலைதுறையில் ஏறுமுகத்தை காணலாம். வெள்ளிகிழமையில் மொச்சையை வைத்து வணங்கலாம். ஒருபிடி வெள்ளை சாதத்தில் மொச்சையை கலந்து, காக்கைக்கு வைத்து வந்தால் சுக்கிரதோஷம் நீங்கும். முடிந்தால் வெள்ளிதோறும் மொச்சை பருப்பை பத்து பேருக்காவது தானம் கொடுத்தால் இன்னும் பல நன்மைகள் ஏற்படும். வெள்ளிதோறும் சுக்கிர பகவானுக்கு பிடித்த இனிப்பை வைத்து வணங்கினால் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரதோஷம் நீங்கும். திருமண தடை விலகும். வெள்ளியின் நிறம் வெள்ளை. அது சுக்கிரனின் ஆதிக்கம். சுக்கிரனுக்குரிய வெள்ளியில் செய்த கொலுசை பெண்கள் காலில் அணிந்தால் முகம் பொலிவு பெறும். உடல் வலிமை பெறும். சுக்கிரனை வணங்கி சுபிக்ஷம் பெறுவோம்.


சுக்கிரனை வழிபடும் முறைகள்,

வெள்ளிக்கிழமைகளில் விரத மிருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தல்.

துர்க்கை அம்மனை வழிபாடு செய்தல், துர்க்கா பூஜை செய்தல், ஸ்ரீசரக்ம், தேவிதுதிபாடல்கள், துர்க்கா சாலிஸா போன்றவற்றை பாராயணம் செய்தல்.

6
முகருத்ராட்சை அணிதல். வைரக்கல் பதித்த மோதிரம் அணிவது,

பட்டாடை, மொச்சை பயிர், தயிர், பாலாடை கட்டி, வாசனைப் பொருட்கள், சர்க்கரை,, சூடம், ஆடை, அரிசி போன்றவற்றை வெள்ளியன்று மாலை வேளையில் ஏழைப் பெண்ணுக்கு  தானம் செய்தல்.

வெண்ணிற உடைகள்,கைகுட்டைகள் பயன்படுத்துதல், வெள்ளைமலர்களை சூடுதல், வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்துதல்,

ஓம் தீரம் த்ரிம் ட்ரௌம் சஹ சுக்ர பகவதே நமஹ எனும் பிஜ மந்திரத்தை 40 நாட்களுக்குள் 20000 தடவை அதிகாலையில் பாராயணம் செய்யும்.

பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது.

சுக்கிரன் காயத்ரி
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்
சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. சுக்கிர சாந்தி என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். சுக் சுக்ராயநம: என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை சும் சுக்ராய நம : எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.
பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்

எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக